முகப்பு
செய்திகள்

நெஞ்சை உருக்கிய நடிகர் கார்த்தியின் ட்வீட்!

நம்முடைய சிறிய வயதில் செய்கின்ற செயல்கள் தான்  நம்மை வளர்த்தெடுக்கும்

Updated On : 11 பிப்ரவரி, 2018 at 12:35 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM

நம்முடைய சிறிய வயதில் செய்கின்ற செயல்கள் தான்  நம்மை வளர்த்தெடுக்கும்.  நல்ல எண்ணங்களையும் பழக்கத்தையும் இளம் பருவத்தில் விதைத்துவிட்டால் அது பசுமரத்தாணி போல அவர்கள் மனத்தில் பதிந்து அவர்கள் வாழ்வை வளமாக்கும். அண்மையில் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு சிறிய செய்தி இதனையொட்டி இருந்தது. 

கார்த்தியின் மகள் சிவகுமார் ஊரில் இல்லாத சமயத்தில் தனது ஆத்தா (பாட்டி)யை தனியே விடாமல் இரவில் அவர் அருகில்தான் தூங்குவாராம். இந்த சின்னஞ்சிறிய வயதிலேயே பெரியவர்களுக்காக யோசித்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் மகளின் அன்பான செயலைப் பற்றி ட்விட்டரில் பதிவொன்றை எழுதியுள்ளார் கார்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.