முகப்பு
செய்திகள்

மகள் அனோஷ்காவின் பள்ளிக்கு வந்த நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலானது!

நடிகர் அஜித், மகள் அனோஷ்காவின் பள்ளி நிகழ்ச்சிகளை தவறாமல் கலந்து கொள்ளும் பழக்கம்

Updated On : 12 பிப்ரவரி, 2018 at 4:47 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM

நடிகர் அஜித், மகள் அனோஷ்காவின் பள்ளி நிகழ்ச்சிகளை தவறாமல் கலந்து கொள்ளும் பழக்கம் உடையவர். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தயங்காதவர் அஜித் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். 

அனோஷ்கா மற்றும் மனைவி ஷாலினியுடன் பள்ளி நிகழ்ச்சியில் அண்மையில் சால்ட் அண்ட் பெப்பர் கலரில் சற்று பெரிய தாடியுடன் கூடிய புதிய ஸ்டைலிஷ் லுக்குடன் வருகை தந்த அஜித்தைப் பார்த்து ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.  

மகளின் ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித் அனோஷ்காவுடன் சேர்ந்து இணைந்து சைக்கிள் டயர் ஓட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இதன் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

பைக் கார் ரேஸுக்குப் புகழ் பெற்ற அப்பா அஜித், மகளுடன் இணைந்து சைக்கிள் டயரை உருட்டிச் செல்லும்போது லேசாகத் தடுமாற, அனோஷ்காவின் முகத்தில் கொள்ளைச் சிரிப்பு. அடுத்த முனையை அடைந்தவுடன், மீண்டும் தந்தையும் மகளும் மருமுனைக்கு ஓடும் இந்தக் காட்சியை எந்தத் திரைப்படத்திலும் பார்க்க முடியாது.  

அந்த புகைப்படங்கள் மற்றும் விடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து ட்ரெண்டாக்கிவருகின்றனர். 

'தல' எப்படி தலை காட்டினாலும் அது ரசிகர்களுக்கு கொண்டாடம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.