செய்திகள்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் தயாராகிவிட்டாரா கெளதம் மேனன்?

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை

ராக்கி

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். 

'எனை நோக்கி பாயும் தோட்டா’படத்தைப் பற்றி கெளதம் மேனன் கூறுகையில், ‘நான்கு வருடங்கள் தொடரும் ஒரு காதல், அதன் பின் ஏற்படும் பிரிவு, மீண்டும் அந்தப்  பெண்ணைத் தேடிப் போவது, அந்தத் தேடலின் போது எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் மையக் கதை’ என்றார்.

காதலியை தேடிச் செல்லும் காதலன் இந்த ஒன் லைன் கதையை மிகவும் சுவாரயஸ்யமாகவும், விறுவிறுப்பாக காட்சிபூர்வமாகவும் தன்னுடைய பல படங்களை எடுத்துள்ளார் கெளதம் மேனன். இதே வரிசையில் டாப் ஒன்னில் உள்ள விடிவியின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருக்கிறாராம்.

விடிவி வெளிவந்து எட்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அதன் நாயகன் கார்த்திக் இப்போது என்ன செய்கிறான்? அவனது வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன? காதல் அவனை கனியச் செய்துவிட்டதா என இதுபோன்ற சில கேள்விகளுக்குப் பதில் தேடும் வகையில் எழுதிய திரைக்கதை தான் விடிவி பார்ட் 2.

இதன் டைட்டில் ‘ஒன்றாக’. கார்த்திக்குடன் (சிம்பு) அவனது மூன்று நண்பர்களையும் நடிக்கவைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எதுவும் இன்னும் முடிவாகவில்லை’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கெளதம் மேனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT