செய்திகள்

'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ள அடுத்த மலையாள பாடல்! (விடியோ இணைப்பு) 

இணையத்தில் சில மாதங்களுக்கு முன் வைரல் ஹிட் ஆன  'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல, காதலர் தின ஸ்பெஷலாக மலையாள இளம் நடிகை ஒருவரின் பாடல் காட்சி வைரலாகப் பரவி வருகிறது. 

DIN

திருவனந்தபுரம்: இணையத்தில் சில மாதங்களுக்கு முன் வைரல் ஹிட் ஆன  'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல, காதலர் தின ஸ்பெஷலாக மலையாள இளம் நடிகை ஒருவரின் பாடல் காட்சி வைரலாகப் பரவி வருகிறது. 

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் உருவான "வெளிப்பாடின்டே புஸ்தகம்" என்ற படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு, கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது. பின்னர் அது இந்திய அளவில் மிகவும் பிரபலமான விடியோவாக பகிரப்பட்டது.

அந்த வரிசையில் காதலர் தினம் வரவுள்ளதால், அதனை கொண்டாடும் பொருட்டு விரைவில் வெளியாகவுள்ள "ஒரு ஆதார் லவ்;' என்ற மலையாள படத்திற்காக  எடுக்கபட்ட 'மாணிக்ய மலரேயா பூவி' என்ற பாடல் பிப்ரவரி 9 அன்று யுடியூபில் வெளியானது.

இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் என்பவர் இசை அமைத்து உள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இப்பாடலை பாடி உள்ளார். புகழ்பெற்ற "ஜிமிக்கி கம்மல்" பாடலையும் இவரே பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடலில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், 18 வயதேயான இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின்   உள்ளம் கொள்ளை கொள்ளும் கண் அசைவுகள்தான். இதன் காரணமாக இப்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பிரியாவுக்கு கேரளாவிலுள்ள திருச்சூர் சொந்த ஊராகும். இவர் ஒரு தொழில்முறை 'மோகினியாட்ட' கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  படத்தில் பிரியாவின் வேடம் முதலில் சிரியதாகத்தான் இருந்தது என்றும், தற்பொழுது பிரியாவின் திறமையின் காரணமாக அவருக்கு படத்தில்  காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT