திருமணத்துக்குத் தயாராகிவிட்டாரா ஸ்ருதி ஹாசன்?
தன் மனத்துக்கு பிடித்த வேலைகளைச் செய்வதற்குத் தயாராகி வருகிறார் கமல் மகள்.
நடிகை ஸ்ருதி ஹாசன் அப்பாவைப் போல மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசும் இயல்புடையவர். போலவே பன்முனைத் திறமையும் உடையவர். இசையைத் தான் அவர் மனம் முதலில் நாடியது. பின்பு நடிக்கத் தொடங்கியதிலிருந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்து வந்தார். அப்பா மற்றும் நண்பர் மைக்கேல் கோர்ஸேலுடன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார் ஸ்ருதி.
அந்தப் புகைப்படம் வைரலாகி மைக்கேலுடன் ஸ்ருதி டேட்டிங் செய்கிறார் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கோலிவுட்டில் ஒரு பேச்சு நிலவியது. ஆனால் ஸ்ருதி தரப்பிலிருந்து இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரவில்லை.
ஸ்ருதியின் நெருங்கிய வட்டம் அவரிடம் இதே கேள்வியைக் கேட்ட போது, 'என்னுடைய திருமணத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்காக நீங்கள் யாரும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். ப்ளான் செய்யவும் வேண்டாம். திருமணத்தை பற்றி இப்போது நான் சிந்திக்கவில்லை’ என பளிச்சென்று பதில் கூறிவிட்டாராம்.
Advertisement
சமீப காலமாக ஸ்ருதி படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. அவரே சில படங்களைத் தவிர்த்துவிட்டார். இந்நிலையில் ஆங்கில மாத இதழுக்கு அண்மையில் ஸ்ருதி பேட்டி அளித்தார்.
தற்போது ஸ்ருதி நடிப்பிலிருந்து ஒரு சிறிய ப்ரேக் எடுத்துள்ளார். தன்னுடைய வேலைகளை, அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள ஸ்ருதி ஹாசனுக்கு அவகாசம் தேவைப்பட்டது. அத்தகைய ஓய்வு அவசியம் என்பதை உணர்ந்து இந்த ப்ரேக்கை எடுத்துக் கொண்டாராம். விரைவில் தன் மனத்துக்கு பிடித்த வேலைகளைச் செய்வதற்குத் தயாராகி வருகிறார் கமல் மகள்.