செய்திகள்

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் - நடிகர் கமல் அறிவிப்பு! 

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். 

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக இராமநாதபுரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கமல்ஹாசன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார். 

தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னரே திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதைப் பற்றி முடிவெடுக்க இயலும் என்றும், தற்பொழுது 3 படங்களில் ஒப்பந்தம் ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னரே படங்களில் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவெடுக்க இயலும் கூறியுள்ள அவர், காலையில் வெளியான தகவல்களை மறுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT