முகப்பு
செய்திகள்

ரஜினி முதலில் கர்நாடகாவிலிருந்து துவங்கட்டும்: விளாசிய ராதாரவி! 

சிஸ்டத்தை சரி செய்வதை எல்லாம் ரஜினி முதலில் கர்நாடகாவிலிருந்து துவங்கட்டும் என்று நடிகர் ராதாரவி காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 பிப்ரவரி, 2018 at 5:44 PM
பகிர்:

சென்னை: சிஸ்டத்தை சரி செய்வதை எல்லாம் ரஜினி முதலில் கர்நாடகாவிலிருந்து துவங்கட்டும் என்று நடிகர் ராதாரவி காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழின் பிரபல குணசித்திர நடிகர் ராதாரவி. இவர் வியாழன் அன்று சென்னை வடபழனியில் அமைந்துள்ள தமிழக பின்னணிக் குரல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தார். அப்பொழுது ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ரஜினி ஒரு நல்ல மனிதர். என்னுடைய நல்ல நண்பர். ஆனால் அவர் இந்த சிஸ்டத்தை சரி செய்வதை எல்லாம் முதலில் கர்நாடகாவிலிருந்து அவர் துவங்கட்டும். என்னுடைய 65 வயதில் இந்த 'ஆன்மீக அரசியல்' என்பதைப் பற்றி எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.

Advertisement

கமல் ரொம்ப பெரிய மனிதர். அவர் பேசுவது டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் போல. எனக்கு அது புரியவில்லை. அத்துடன் காவி என்கிறார்; கருப்பு என்கிறார். ஒரே கலர்கள் பற்றியே பேசுகிறார்.   

அதேபோல விஷால் நான் மதுரையில் பிறந்தவன், மதுரைக்காரன் என்கிறார். நான் தெலுங்கன்.ஆனால் முதல்வர் பதவிக்கு எல்லாம் ஆசைப்பட மாட்டேன்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.