செய்திகள்

வெளியானது கோலி சோடா-2 திரைப்பட ட்ரைலர்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி வரும் கோலி சோடா 2 படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  

DIN

சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி வரும் கோலி சோடா 2 படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  

ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி 2014-ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக கோலி சோடா-2 வினை இயக்குநர் விஜய் மில்டன் உருவாக்கி வருகிறார்.

வாலிபால் மற்றும் இதர விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு 'ஸ்போர்ட்ஸ் மூவியாக' இது உருவாகி வருகிறது.  நடிகர் கிஷோர், இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனி உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். 

அத்துடன் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்கும் ஆச்சர்ய தகவலும்  வெளியானது.

இந்நிலையில் கோலி சோடா 2 படத்தின் ட்ரைலர் புதன் மாலை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பினைத் தூண்டும் வகையில் ட்ரைலர் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

புதுப்பூங் கொன்றை... பாயல் ராதாகிருஷ்ணா!

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

SCROLL FOR NEXT