செய்திகள்

தெய்வமகள் சீரியல் கலாட்டா! ஒரே நாளில் வளர்ந்த தாடி முதல் ‘அண்ணியார்’பற்றிய சத்யாவின் செல்ஃபி விடியோ வரை!!

இத்தொடரின் நாயகனான பிரகாஷுக்கு ஒரே நாளில் தாடி வளர்ந்துவிட்டதை காமெடியாக கலாய்த்துள்ளனர்.

சினேகா

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வீட்டில் 8 மணி முதல் 8.30 வரை ஆறு நாட்கள் 'ஜெய்ஹிந்த் விலாஸ்’ வீட்டில் நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த அதன் ரசிகர்கள் இப்போது தெய்வமகள் சீரியல் முடியப் போகும் தருணத்தில் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

ஒருவழியாக இந்த மெகா சீரியலை முடித்தார்களே என்று ஒரு சாராரும், தினமும் பார்த்த முகங்களைப் பிரியப் போகும் சோகமுமான மறு சாராரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை எழுதிவருகின்றனர்.

இத்தொடரின் நாயகனான பிரகாஷுக்கு ஒரே நாளில் தாடி வளர்ந்துவிட்டதை காமெடியாக கலாய்த்துள்ளனர்.

நாயகி சத்யாவாக நடித்த வாணி போஜன் தனது முகநூலில் அனைவருக்கும் பை சொன்னது முதல் அண்ணியார் தொடர் முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால் லைவ்வாக யூட்யூப்பில் பேசியதும் ட்ரெண்டாகிவருகிறது.

ஒரு தொடர் முடிந்தால் என்ன? அலைகள் ஓயுமா என்ன? இதோ அடுத்து தயாராகிவிட்டாள் நாயகி. இயக்குநர் அகத்தியன் மகளும் சென்னை 28 படத்தின் ஹீரோயினுமான விஜயலட்சுமி முதன் முதலில் சீரியலில் நடிக்கிறார். கமல், ரஜினி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அம்பிகாவும் இத்தொடரில் நடிக்கிறார். 

சீரியல்கள் பிடிக்கிறதோ இல்லையோ அவற்றைத் திட்டிக் கொண்டே பார்ப்பதுதான் பலரின் வழக்கம். இந்த புதிய நெடுந்தொடர் ஆரம்பத்தில் நிச்சயம் கவனத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. போகப் போக என்னவாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெய்வமகள் தொடரில் நடித்தவர்களின் புகைப்படங்கள் சில -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT