செய்திகள்

பாகுபலி படத்துக்காக அண்ணா பல்கலைக்கழக வேலையை ராஜிநாமா செய்தேன்: மதன் கார்க்கி

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி’. இரு பாகங்களாக வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதன் தமிழ்ப் பதிப்புக்கு பாடாலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதினார்.

இந்நிலையில் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், TechofesAwards2018 என்றொரு விருது நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இந்நிகழ்வில் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கி பெற்றார். பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பாகுபலி படத்தில் இடம்பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் வகித்த ஆசிரியர் (உதவிப் பேராசிரியர்) பணியை ராஜிநாமா செய்தேன். பாகுபலி படத்துக்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை TechofesAwards2018 நிகழ்வில் பெற்றது உணர்வுபூர்வமான தருணம். ராஜமெளலி, ஷோபு, கீரவாணி மற்றும் படக்குழுவினருக்கு மிக்க நன்றிகள். மறக்கமுடியாத பயணம் அது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT