செய்திகள்

சீமராஜா படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம் (படங்கள்)

எழில்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் - சீமராஜா. இப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்றுக்கொண்டுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 12-வது படம். விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 13) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சீமராஜா என்கிற படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. முதல் தோற்ற போஸ்டரும் வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT