செய்திகள்

வெட்கம் இல்லாதவன்தான் சினிமாவில் நடிக்க முடியும்! சொன்னவர் யார்?

பீட்சா, ராமன் தேடிய சீதையில் போன்ற படங்களில் நடித்த ரம்யா நம்பீசனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.

ராக்கி

பீட்சா, ராமன் தேடிய சீதையில் போன்ற படங்களில் நடித்த ரம்யா நம்பீசனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.  

விஜய் சேதுபதியுடன், சேதுபதி படம் அவரது பெயர் சொல்லும் விதமாக அமைந்தது.

2016-ம் ஆண்டு பூஜை போடப்பட்ட படம் 'நட்புன்னா என்னானு தெரியுமா' இதில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடித்த கவின் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவக்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்கியராஜ் மிஷ்கின், கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு வாழ்த்தினர். கரு பழனியப்பன் பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

ஹீரோ கவினுக்கு அறிவுரை கூறும்விதமாக, 'மிஷ்கின் சொன்னது போல நல்ல நடிகன் ஆகணும்னா வெட்கம் அவமானம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு நடிக்க வரவேண்டும்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT