முகப்பு
செய்திகள்

கடன் தொகை ரூ 6.2 கோடியை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கோச்சடையான் படத்துக்கான கடன் தொகை ரூ 6.2 கோடியை 12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

கோச்சடையான் திரைப்படம் தொடர்பாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "கோச்சடையான்' திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளியானது. கோச்சடையான் படத்தைத் தயாரிக்க, தனியார் நிறுவனத்திடம் வாங்கிய கடன் தொகையில் ரூ. 6.2 கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பிச் செலுத்தவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

மீதிப்பணத்தைத் திருப்பித் தருவது குறித்து பிற்பகல் 12.30க்குள் பதிலளிக்கவேண்டும். மீதிப்பணத்தைத் திருப்பித் தர முடியாது எனக் கூறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கோச்சடையான் படத்துக்கான கடன் தொகை ரூ 6.2 கோடியை 12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.