முகப்பு
செய்திகள்

தம்பியை இழந்து தவிக்கிறேன்! ஹெல்மெட் அணிந்திருந்தால் இறந்திருக்க மாட்டான்! நடிகர் ஆதி கண்ணீர்!

நடிகர்களின் கூடவே நிழல் போல இருப்பவர்கள் அவர்களது உதவியாளர்கள்தான். அவர்களின் வலது கரம் போல செயல்படுவார்கள்.

Updated On : 23 பிப்ரவரி, 2018 at 11:25 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM

நடிகர்களின் கூடவே நிழல் போல இருப்பவர்கள் அவர்களது உதவியாளர்கள்தான். அவர்களின் வலது கரம் போல செயல்படுவார்கள். படப்பிடிப்பு இருக்கிறதோ இல்லையோ உதவியாளர்கள் எப்போதும் உடன் இருப்பார்கள். கடின உழைப்பும், அன்பும், நம்பிக்கையான ஒருவர் அப்படியொரு உதவியாளராக கிடைத்தால் அந்த நடிகரின் பாதி சுமை குறைந்துவிடும். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் ஆதியின் உதவியாளரான சதீஷ். ஆதியின் வேலைகளை நேர்த்தியாகவும் மிகுந்த அக்கறையுடனும் செய்து வந்தவர் சதீஷ். அவரை அண்ணா என்று தான் அழைப்பாரம். 

சதீஷ் அண்மையில் பைக்கில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனால் மனம் உடைந்த நிலையில் ஆதி தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில், 'என் தம்பியை இழந்து தவிக்கிறேன். அவனது ஆன்மா சாந்தி அடையட்டும். அவன் இல்லாமல் என்னுடைய வாழ்க்கை முன்பு போல இருக்காது. அவனிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவன் ஹெல்மட் அணிந்திருக்கலாம்’ என்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியும் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.