செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் பூத உடல் இன்றிரவு இந்தியாவிற்கு கொண்டுவரப்படும்! கனத்த மனத்துடன் கடைசியாக வழியனுப்ப மீடியா காத்திருக்கிறது!

ஸ்ரீதேவியின் பூத உடலைக் காணவும் இறுதி அஞ்சலி செலுத்தவும் திரையுலகமும் அவரது ரசிகர்களும் ஒட்டுமொத்த மீடியாவும் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்.

சினேகா

சிவகாசியில் பிறந்து, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் மற்றும் பாலிவுட் என இந்தியத் திரையில் உச்சத்தை தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று இரவு (பிப் 24,2018) 11.30 மணி அளவில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் பூத உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது துபாயில் மருத்துவ நடைமுறைகள் முடிந்து தலைமை காவல் அலுவலகத்திற்கு ஸ்ரீதேவியின் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. 

ஸ்ரீதேவியின் உடலை துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அனுமதி கிடைத்தவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்திய கொண்டுவரப்பட உள்ளதாகவும் இன்று இரவு 8 மணிக்கு மும்பை கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொண்டுவரப்படும் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் பூத உடலைக் காணவும் இறுதி அஞ்சலி செலுத்தவும் திரையுலகமும் அவரது ரசிகர்களும் ஒட்டுமொத்த மீடியாவும் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

மறுவெளியீடாகும் ரன்!

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

SCROLL FOR NEXT