செய்திகள்

புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார்! எங்கு? எப்போது? இதோ விபரங்கள்!

சினிமாவையும் ஸ்போர்ட்ஸையும் இந்தியர்கள் மனத்துக்கு மிக நெருக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த இரண்டும் ஒரே இடத்தில் நிகழ்ந்தால் அதில் சந்தோஷத்துக்கு குறைவிருக்காது.

உமாகல்யாணி


சினிமாவையும் ஸ்போர்ட்ஸையும் இந்தியர்கள் மனத்துக்கு மிக நெருக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த இரண்டும் ஒரே இடத்தில் நிகழ்ந்தால் அதில் சந்தோஷத்துக்கு குறைவிருக்காது. அப்படியான ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

அண்மையில் கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் ஃபுட்பால் போட்டியில் (ISL) சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்த பிரியா வாரியர் கலந்து கொண்டார். அவருடன் நடிகர் ரோஷனும் கலந்து கொண்டார். கொச்சியில் ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் கேரள அணியின் பகுதி பங்குதாரான சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார். சச்சினை ஸ்டேடியத்தில் பிரியா வாரியரும் ரோஷனும் சந்தித்து அவருடன் உரையாடி, தங்களது கேரள அணியின் ஜெர்கினை அவரிடம் வழங்கி,  உற்சாகமாக செல்பி மற்றும் விடியோ எடுத்துக் கொண்டனர். ட்விட்டரில் அவற்றை பகிர்ந்து சச்சினை சந்தித்த அந்த மகிழ்ச்சியான அனுபவத்தைப் பற்றி குறிப்பிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார் பிரியா வாரியர்.

இந்தக் காணொலிகள் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. இம்முறை பிரியாவுக்க்காக அல்ல சச்சினுக்காக என்கின்றனர் இணையவாசிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உழவா் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை

தேசியக் கல்வி உதவித்தொகைக்கு நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.49,456 கோடி லாபம்: 9% வளா்ச்சி

சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT