செய்திகள்

என்னுடைய இரண்டாவது தாயை இழந்தேன்! ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’  திரைப்பட மகள் கண்ணீர்!

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த திரைப்படம் மாம். அதில் ஸ்ரீதேவியின் கணவராக அட்னான் சித்திக்  என்னும் பாக்கிஸ்தான் நடிகர் நடித்திருந்தார். அவரது மகளாக சாஜல் அலி நடித்திருந்தார்.

சினேகா

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த திரைப்படம் மாம். அதில் ஸ்ரீதேவியின் கணவராக அட்னான் சித்திக்  என்னும் பாக்கிஸ்தான் நடிகர் நடித்திருந்தார். அவரது மகளாக சாஜல் அலி நடித்திருந்தார். அட்னான் ஸ்ரீதேவியின் மறைவுக்குத் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ’நானும் துபையில் ஸ்ரீதேவிஜியின் உறவினர் திருமணத்தில் கலந்துக் கொண்டேன். அந்த விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடி மகிழ்ந்த ஒரு அழகி நான்கே நாட்களின் மரணம் அடைவார் என யார் எதிர்ப்பார்த்திருக்க கூடும்? ஸ்ரீதேவிஜியின் கணவர் போனி கபூருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை’ என்று கூறுயுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் ஸ்ரீதேவிஜியுடன் மாம் திரைப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு பெருமையான விஷயம். அவர் இப்போது நம்முடன் இல்லை என்பது மிகப் பெரிய துயரத்தை தருகிறது. அவருடைய பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் அவரை இழந்து தவிக்கின்றனர். அவருடைய இழப்பை தாங்கும் வலிமையை இறைவன் அவரது குடும்பத்துக்கு அளிக்க வேண்டும்” என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் அட்னான் சித்திக்.

ஸ்ரீதேவியின் கடைசி திரைப்படமான “மாம்”  படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்த பாக் நடிகை சாஜல் அலி, நான் எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனது நிஜ வாழ்வில் தாயை இழந்த சாஜல் அலிக்கு ஸ்ரீதேவி ஒரு தாய் போல அன்பு செலுத்தி உள்ளார். இதனால் ஸ்ரீதேவியுடன் சாஜல் மன நெருக்கம் கொண்டிருந்தார். அவரை தனது தாயாகவே நினைத்துப் பழகினார்.

தற்போது துபாயில் ஸ்ரீதேவி மரணம் அடைந்த செய்தி கேட்டு சாஜல் அலி அதிர்ச்சி அடைந்துள்ளார்.  ஸ்ரீதேவியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள சாஜல் ’நான் என் தாயை மீண்டும் இழந்துள்ளேன்’ என சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT