செய்திகள்

கவிஞர் தாமரையின் இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்! என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய பாடல் வெளியானது!

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் படம் த்ரில்லர் படம்

சினேகா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கெளதம் மேனன் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் வெளியிடவில்லை.

மிஸ்டர் எக்ஸ் என்றே குறிப்பிடப்பட்ட அந்த இசையமைப்பாளர் யார் என்பதை 2017-ம் ஆண்டு தீபாவளி அன்று தெரிவிப்பதாக கெளதம் மேனன் தனது டிவிட்டரில் கூறியிருந்தார். அதன்படி படத்தின் இசையமைப்பாளர் பெயருடன் 'மறுவார்த்தை பேசாயோ’ மற்றும் ‘நான் பிழைப்பேனோ’ ஆகிய பாடல்களை வெளியிட்டார். மேலும் 'மறுவார்த்தை ‘ரீஸ்ட்ரங்க் வெர்ஷன்' வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு  பாடல்களுமே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவரந்தது.

இசையமைப்பாளர் தர்புக சிவா தலைமையில் இசையமைக்கப்பட்டு, பாடகர் சித் சித்தார்த் பாடலை பாடும் இந்த வீடியோவில் வரும் தர்புக சிவா தான் இந்த 'Mr.X' என்ற சஸ்பென்ஸை இறுதியாக கெளதம் வாசுதேவ் மேனன் இவ்வகையில் உடைத்தார்.

தற்போது ரசிகர்களுக்குப் புத்தாண்டு பரிசாக இப்படத்தில் இடம்பெறும் ‘விசிறி’ எனும் தலைப்பில், ‘எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்..’ என்ற பாடலை வெளியிட்டுட்டார். கவிஞர் தாமரையின் வரிகளில் மெலடியாக மலர்ந்துள்ள இப்பாடல் வைரலாகிவருகிறது. இதுவரை கிட்டத்தட்ட ஏழு லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT