முகப்பு
செய்திகள்

மலேசியாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் (படங்கள்)

தமிழ்த் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர் நடிகைகளும் மலேசியாவுக்குச் சென்றுள்ளார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:55 AM
பகிர்:

மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக தமிழ்த் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர் நடிகைகளும் மலேசியாவுக்குச் சென்றுள்ளார்கள். விஜய். அஜித் ஆகிய இருவர் மட்டும் மலேசியா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சிகளில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கலந்து கொள்வதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு அவர் தலைமை தாங்குவார். மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கில் விழா நடைபெறும். இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர கலை விழாவையொட்டி, ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில், தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.