செய்திகள்

காதலருடன் வைரலாகும் எமி ஜாக்சனின் புகைப்படம் இதுதான்!

சினேகா

பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் எமி ஜாக்சன். மதராஸ பட்டினம், தாண்டவம், தங்க மகன், தெறி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தவர்.

2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த எமி ஜாக்சனுக்கு டோலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்நிலையில், சூப்பர் கேர்ள் எனும் ஆங்கில சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக எமி சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சலஸுக்கு இடம் பெயர்ந்துவிட்டார். அதன்பின் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மட்டும் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார்.

தனது காதலருடன் எமி ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் நேற்று  வெளியிட்டுள்ளார்.  சில மணி நேரத்திலேயே அப்புகைப்படம் வைரலாகியது. அதற்கு முந்தைய புகைப்படத்தில் அன்றைய அவரது மெனுவில் இடம்பெறப்போவதாக இந்த மூன்று விஷயங்களைப் பட்டியல் இட்டிருந்தார். Today - Peace, Love, Pasta என்பதே அது. சில ரசிகர்கள் இந்தப் புகைப்படத்துக்கு வாழ்த்துக்களையும், சிலர் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT