முகப்பு
செய்திகள்

அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ளது அருவி படம்!

அருவி படத்தை இன்று முதல் அமேஸான் பிரைம் வழியாக இணையத்தளத்தில் காணமுடியும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:58 AM
பகிர்:

'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் சமீபத்தில் வெளியாகி, தனது 25-வது நாளை நிறைவு செய்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும் தமிழகம் முழுக்க 110 திரையரங்குகளில் 25 நாள்கள் ஓடி சாதனை செய்தது.

இந்நிலையில் அருவி படத்தை இன்று முதல் அமேஸான் பிரைம் வழியாக இணையத்தளத்தில் காணமுடியும். இதற்கெனத் தனிக்கட்டணங்கள் உண்டு. படம் வெளியான ஒரே மாதத்தில் அருவி படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →