செய்திகள்

பவன் கல்யாண் படம்: வசூல் குறைவதைத் தடுக்க 12 நிமிடக் காட்சிகள் நீக்கம்! புதிய காட்சிகள் இணைப்பு!

அடுத்த இரு நாள்களில் 97 சதவிகிதம் குறைந்துள்ளது. இதைத் தடுக்க புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

எழில்

திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் - அஞ்ஞாதவாசி (AgnathaVaasi). இது பவன் கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகியுள்ள இந்தப் படம், சமீபத்தில் வெளியானது. 

அமெரிக்காவிலும் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளது. பார்க்க நல்ல வசூலாக இருந்தாலும் இது பல மடங்கு குறைந்த வசூலாகும்.

முதல் நாளன்று பிரிவியூ காட்சிகள் வழியாக இந்தப் படம் 1.52 மில்லியன் டாலர் வசூலித்தது. ஆனால் வியாழன் அன்று இரு நாள்களில் 97 சதவிகிதம் குறைந்து $44,600 வசூல் மட்டுமே பெற்றது.

அஞ்ஞாதவாசி, முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 60 கோடி வசூலித்தது. ஆனால் விமரிசனங்கள் சாதகமாக அமையாததால் நாளுக்கு நாள் இதன் வசூல் குறைந்து வருகிறது. 

எனினும் தற்போது படத்தின் வசூல் சரிவைச் சரிகட்ட சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெங்கடேஷ் - பவன் கல்யாண் நடித்த சில காட்சிகள் திடீரென படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல ரசிகர்கள் விமரிசித்த சில காட்சிகளும் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதாவது 12 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு, வெங்கடேஷ் நடித்துள்ள 12 நிமிடக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என படக்குழு கணித்துள்ளது. பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

SCROLL FOR NEXT