முகப்பு
செய்திகள்

விஜய் படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்தார் ஏ.ஆர். முருகதாஸ்!

இன்று இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இதையொட்டி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் ஒன்றை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:01 PM
பகிர்:

விஜய்-யின் அடுத்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். நடிகர்களில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இன்று இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இதையொட்டி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து விஜய் படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளார் முருகதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.