செய்திகள்

'காலா' டப்பிங்கில் முழு வேகத்தில் ரஜினி! 

சென்னை மைலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டூடியோ ஒன்றில் 'காலா' திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கினார்.

DIN

சென்னை: சென்னை மைலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டூடியோ ஒன்றில் 'காலா' திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கினார்.

'கபாலி' படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'.

இப்படத்தில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் தயாரிபில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த், தான் நடித்த பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை சனிக்கிழமையன்று மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் தொடங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT