செய்திகள்

தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி! பத்மாவத் படத்தைப் புகழ்ந்து தள்ளிய வசந்தபாலன்!

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும்

சினேகா

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த திரைப்படம் நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஜன.25) வெளியானது. சர்ச்சைகளின் காரணமாக ‘பத்மாவதி’ என்றிருந்த தலைப்பு பின்னர் ‘பத்மாவத்’ ஆனது. படம் பார்த்த பலர் தங்கள் விமரிசனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக்கில் இப்படத்தின் விமரிசனத்தை சுருக்கமாக பதிவு செய்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை.திரையின் ஒவ்வொரு பிரைமையும் பன்சாலியும் சுதீப் சட்டர்ஜியும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்கள். ஒரு ஓவிய கண்காட்சியை கண் கொள்ளாமல் பார்த்தது போன்ற அற்புதமான அனுபவம். தீபிகா படுகோனே இந்தியாவின் அத்தனை அழகையும் ஒருங்கமைவு செய்த பேரழகி. தீபிகாவின் ஒவ்வொரு அசைவுகளும் அழகுடன் அபிநயம் பிடிக்கிறது. ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி. தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி. வேட்டையாட துடிக்கும் பேரழகு. ரன்வீர் சிங் அத்தனை நயங்களை நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளார்.ஒளிப்பதிவிலும் இயக்கத்திலும் இது நேர்த்தியான உன்னத படைப்பு. ஒரு ஷாட்டும் அடுத்த ஷாட்டும் எத்தனை நளினமாக அழகியலுடன் எடுக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளது.அதிகாலை நேரத்தின் ஒளி சிதறல்களை சுதீப் சட்டர்ஜீ மிக அற்புதமாக அமைத்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் திரைப்படம் பார்த்தேன். ஆக மொத்தம் பேரனுபவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

முதல் 100 செயலிகளின் பட்டியலில் எங்கே போனது ஸோஹோவின் அரட்டை?

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT