செய்திகள்

என்னை நோக்கி பாயும் தோட்டாவில் வைரலாகும் கவிஞர் தாமரையின் 'விசிறி’ பாடல் !

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம்

சினேகா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா.

இப்படத்தில் இடம்பெறும் ‘விசிறி’ எனும் தலைப்பில், ‘எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்’ என்ற பாடல் கவிஞர் தாமரையின் வரிகளில் மெலடியாக மலர்ந்துள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து யூட்யூபில் வைரலாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது இப்பாடல். இது குறித்து கவிஞர் தாமரை தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 'விசிறி', எனை நோக்கி பாயும் தோட்டா படப்பாடல். வெளியிட்டு 25 நாட்களில் 40 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. மிகச் சவாலான பாடலாக இருந்தது. இதனை வெற்றிப்பெற செய்த அனைவருக்கும் நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT