செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்குக் கடும் போட்டி கொடுத்த இளம் பெண் யார்? (படங்கள்)

எழில்

ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இணையாக ஒருவர் அதிகக் கவனத்தை ஈர்த்தார். ஏலத்தில் எங்களுக்குக் கடும் போட்டி கொடுத்தவர் என்று ப்ரீத்தி ஜிந்தாவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். யார் அந்த இளம் பெண்?

நடிகை ஜுஹி சாவ்லா - தொழிலதிபர் ஜெய் மேத்தாவின் 16 வயது மகளான ஜான்வி மேத்தா ஐபிஎல் ஏலத்தில் மிகவும் துடிப்பாக கலந்துகொண்டு பலரையும் ஈர்த்துள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நடிகர் நடிகர் ஷாருக்கானும் ஜுஹி - மேத்தாவும் உரிமையாளர்களாக உள்ளார்கள். இதனால் ஜுஹியின் மகளான ஜான்வி இந்த வருட ஏலத்தில் தன் தந்தையுடன் கலந்துகொண்டுள்ளார். இவருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ஜான்வி பற்றி பலரும் அறியும்படி செய்துவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா. திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்த ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

தனது மகள் குறித்து மேத்தா ஒரு பேட்டியில் கூறியதாவது: ஜான்விக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உண்டு. ஐபிஎல் ஏலத்தில் அவர் பங்கேற்பது அருமையான அனுபவமாக அமைந்துள்ளது. அவர் தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார். ஐபிஎல் ஏலத்துக்காக இந்தியாவுக்கு இரண்டு மூன்று நாள்கள் வந்துள்ளார் என்று கூறியுள்ளார். ஐபிஎல் இணையத்தளத்துக்கு ஜான்வி அளித்த பேட்டியில், ஏலத்தில் கலந்துகொண்டு அட்டையை உயர்த்திப் பிடித்தது நல்ல உடற்பயிற்சியாக அமைந்துள்ளது. எங்கள் அணிக்கு கிறிஸ் லின் தேவை என நினைத்தோம். அதேபோல அவர் எங்களுக்குக் கிடைத்துள்ளார். அவர் நிறைய சிக்ஸர் அடிப்பார். அவர் விளையாடுவதைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT