செய்திகள்

நடிகர் விஜயைப் பற்றி பார்த்திபன் எழுதிய கவிதை இதுதான்! 

சில படங்களில் அவருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

சினேகா

சமீபத்தில் நடிகர் ஆர்.பார்த்திபன் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களைச் சந்தித்து வருகிறார். அவரது மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்கு நேரில் சென்று அழைக்கவே அவர் இச்சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

பார்த்திபன் சீதா தம்பதியரின் மகள் கீர்த்தனா, இயக்குநர் மணி ரத்னத்தின் கன்னத்தின் முத்தமிட்டால் படத்தில் நடித்தவர். சமீபத்தில் மணி ரத்னத்தின் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

கீர்த்தனாவின் திருமணம் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை கீர்த்தனா மணக்கவுள்ளார். இத்திருமணம் சென்னையில் ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெறவிருக்கிறது. நடிகர் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம் என திரையுலக விஐபிகளுக்கு பத்திரிகை வைத்து வருகிறார் பார்த்திபன்.

அண்மையில் நடிகர் விஜயை சந்தித்து அவருக்கு பத்திரிகை வைத்து திருமணத்துக்கு கட்டாயம் வருமாறு அழைத்தார் பார்த்திபன். விஜய் மற்றும் அவரின் தாயார் ஷோபா சந்திரசேகருடன் ஒரு செஃல்பியை எடுத்திருந்த பார்த்திபன், அதை தனது பாணியில் ஒரு கவிதையுடன் டிவிட்டரில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த கவிதையை தங்களது வலைப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT