சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் மாறியது எப்படி?: விடை சொல்லும் விடியோ!
நீண்ட நேரம் உடற்பயிற்சி நிலையத்திலும் ஒப்பனை அறைகளிலும் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்ட பிறகே...
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று இந்தப் படம் வெளியானது.
இந்தப் படத்தில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது, அச்சு அசல் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் மாறியிருந்ததுதான்.
நீண்ட நேரம் உடற்பயிற்சி நிலையத்திலும் ஒப்பனை அறைகளிலும் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்ட பிறகே ரன்பீர் கபூரால் சஞ்சய் தத் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடிந்துள்ளது.
அதனை ஒரு விடியோவாக வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.