முகப்பு
செய்திகள்

டி.ஆர். இயக்கும் ‘இன்றைய காதல்... டா’: நமீதா கதாநாயகி!

இந்தப் படத்திலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் உருவாகவுள்ள இன்றைய காதல்... டா என்கிற படத்தை இயக்கவுள்ளார். டி. ராஜேந்தர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நமீதா இந்தப் படத்தில் டான் வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழுக்க, முழுக்க இளமை சொட்டும் காதல் கதை, இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற கதை, காதல்... காதல்... காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இப்படத்தின் செய்திக்குறிப்பில் படம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்தப் படத்திலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார் டி.ஆர். சிம்பு சினி ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. எனினும் இந்தப் படத்தில் டி.ஆர். நடிப்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு பட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் தன்னுடைய பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் டி.ஆர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments