முகப்பு
செய்திகள்

ஒருத்தரையும் விட்டுவைக்காத தமிழ்ப்படம் 2: எதிர்பார்ப்பை உருவாக்கும் புதிய விடியோ!

பட வெளியீட்டுக்கு முன்பு படக்காட்சி ஒன்றின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப்படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். 

சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் 2 படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இசை - என். கண்ணன். தமிழ்ப்படம் 2 ஜூலை 12 அன்று வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பு படக்காட்சி ஒன்றின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, தமிழ்ப்படம் போல அதன் இரண்டாம் பாகத்திலும் ஒருத்தரையும் விட்டுவைக்காமல் கிண்டல் செய்திருப்பது தெரியவருகிறது. படம் முழுக்க இன்னும் என்னென்ன இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பை இந்த விடியோ மேலும் உருவாக்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →