முகப்பு
செய்திகள்

ஆகஸ்ட் 24-ல் வெளியாகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம்!

இந்தப் படம் வெளியான பிறகு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் சிம்பு நடிக்கும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

சென்னை-600028 II படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பார்ட்டி படம் ஆகஸ்ட் 24 அன்று வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் வெளியான பிறகு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் வெங்கட் பிரபு. அந்தப் படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments