செய்திகள்

இயக்குநர்களே, நடிக்க வந்து சாகடிக்காதீங்க என்று சொன்ன நடிகர் சித்தார்த்துக்கு கரு.பழனியப்பன் பதிலடி!

இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைப்பெற்றது.

தினமணி

இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிதார்த் பேசியது: இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள மிஷ்கின், அமீர், சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் நான் கூறிக் கொள்வது ஒன்று தான். பத்தாண்டுகளுக்கு முன்னால் இவர்களிடம் நடிக்க சான்ஸ் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது இவர்கள் எல்லோரும் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள். எங்களுக்கும் வாய்ப்பு வருவதில்லை. எனவே திறமை வாய்ந்த இயக்குநர்கள் எல்லாம் இனி நடிக்க வராமல் படங்களை மட்டும் இயக்குங்கள்’ என்று கூறினார்.

மம்முட்டி இந்தப் படத்தை ஏன் பண்ணினார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அவர் க்ரேட் ஆர்டிஸ்ட். இந்த மாதிரி படங்கள் மம்முட்டி பண்ணிருக்கறது நடிப்பு மேல ஆசை இருக்கற ஒவ்வொரு நடிகனுக்கும் உத்வேகம் தரும். அதனால சொல்றேன் டைரக்டர்ஸ் எல்லாம் இனிமே நடிக்காதீங்க’ என்று காமெடியாக சீரியஸ் விஷயத்தைச் சொல்ல அரங்கில் கைதட்டல் எழுந்தது. அதற்கு பதில் சொல்லும் விதமாக இயக்குநர் நடிகர் கரு பழனியப்பன் பேசுகையில், ‘இந்தக் கதையை கேட்ட உடனே நடிக்க மம்முட்டி சம்மதிச்சிருக்கார். அவரை மாதிரி ஒவ்வொரு நடிகரும் இருந்தா நாங்க எல்லாம் ஏன் நடிக்க வரப் போறோம்’ என்று பதிலடி தந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT