செய்திகள்

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: நடிகை ஸ்ரீபிரியங்கா அறிக்கை (படங்கள்)

தான் எந்தவொரு தயாரிப்பாளர், இயக்குநரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என நடிகை ஸ்ரீபிரியங்கா விளக்கம் அளித்துள்ளார்...

எழில்

தான் எந்தவொரு தயாரிப்பாளர், இயக்குநரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என நடிகை ஸ்ரீபிரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச்,  மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீபிரியங்கா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:

இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து என் நடிப்பில் ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது. 

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்தத் தயாரிப்பாளர் / இயக்குநர் / மேலாளர் கட்டுப்பாட்டிலும் இல்லை. திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் சுதந்திரமான நடிகை நான். 

இதுவரை என் நடிப்பையும் நடத்தையையும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படித்தான் இருப்பேன். எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்குப் பிடித்த, எந்த பிரச்னையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக் கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், கதாநாயகன் என எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏப்ரலில் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தங்கம் விலை உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 குறைவு!

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

SCROLL FOR NEXT