செய்திகள்

ஜப்பானில் காலா ரிலீஸ் எப்போது?

காலா ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம் தான்.

ராக்கி

காலா ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று குழந்தைகளுக்குக் கூட தெரிந்த விஷயம் தான். ஆனால் எங்கெல்லாம் ரிலீஸ் ஆகிறது தெரியுமா? இதோ விபரங்கள்.

பலத்த பாதுகாப்புக்கிடையே காலா கர்நாடகாவில் ஜுன் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும் சுவர்ட்ஸர்லாந்து, நார்வே, உள்ளிட்ட பல இடங்களில் உலகெங்கிலும் திரையிடப்பட உள்ளது. தவிர ஜப்பானிலும் அதே தேதியில் வெளியாகவிருக்கிறத். ரஜினிக்கு ஜப்பானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். முத்து திரைப்படத்தில் ஆரம்பித்த இந்த ரசிகர்கள் தொடர்ந்து ஜப்பானில் ரஜினி படங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பான் மட்டுமின்றி அடுத்தடுத்த தேதிகளில் டோக்கியோ, எபினா, இச்சிகவா, நகோயா, சயா, ஓடா, இபாரகி உள்ளிட்ட நகரங்களிலுள்ள திரையரங்குகளில் காலா ரிலீஸ் ஆகிறது. வெல்கம் காலா என்று அத்திரைப்படத்தை வரவேற்கும் வகையில் ஜப்பான் ரசிகர்கள் சில காணொலிகளையும் யூட்யூப்பில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT