முகப்பு
செய்திகள்

காலா படம் பார்க்க ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கேரள தனியார் நிறுவனத்தின் தாராள மனசு!

ரஜினிக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் காலா படம் வெளியாகும் ஜூன் 7 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

கபாலி படம் வெளியானபோது சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள இரு தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்ததுடன் மட்டுமல்லாமல் கபாலி படம் பார்க்க டிக்கெட்டுகளையும் வழங்கியன. அதுபோல கேரள தனியார் நிறுவனம் ஒன்று காலா படம் பார்க்கத் தனது ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்துள்ளது.

காலா படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொச்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் நிர்வாகத்திடம் காலா படம் பார்க்க விடுமுறை கோரினார்கள். அவர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக, உங்களுடைய கோரிக்கைகளுக்காகவும் ரஜினிக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் காலா படம் வெளியாகும் ஜூன் 7 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி நிறுவன உரிமையாளர் கூறியதாவது: எங்களுடைய நிறுவனத்தில் 30 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் பலர் ரஜினியின் தீவிர ரசிகர்கள். எனவே அவர்களுடைய கோரிக்கைகளுக்காகவும் ரஜினிக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் விடுமுறை அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →