செய்திகள்

காலா படம் வெளிவரும் சமயத்தில் ரஜினி எங்கு சென்றுவிட்டார்?

காலா உலகம் முழுவதும் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும்

சினேகா

காலா உலகம் முழுவதும் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டேராடூன் சென்றுள்ளார்.

டேராடூனில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்குமென்றும், விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மூன்று மாத காலத்தில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு 2019 துவக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார். சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாகவிருக்கிறார். ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி ரஜினியின் மகன்களாக நடிக்கிறார்கள். மேகா ஆகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தி நடிக்கவிருக்கிறார். முதன் முறையாக இணையும் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் அனிருத்தும் இசையமைப்பாளராக இணைகிறார்.

ரஜினி காந்த் நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் 2.0 இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT