செய்திகள்

நானும் ஒரு காலா: இரஞ்சித்தைப் பாராட்டிய குஜராத் எம்.எல்.ஏ

நானும் ஒரு காலாதான் என்று 'காலா' திரைபடத்தை பார்த்த பிறகு, அதன் இயக்குநர் இரஞ்சித்தை குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி பாராட்டியுள்ளார்.

DIN

காந்திநகர்: நானும் ஒரு காலாதான் என்று 'காலா' திரைபடத்தை பார்த்த பிறகு, அதன் இயக்குநர் இரஞ்சித்தை குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி பாராட்டியுள்ளார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  கடந்த 7-ஆம் தேதியன்று வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நானும் ஒரு காலாதான் என்று 'காலா' திரைபடத்தை பார்த்த பிறகு, அதன் இயக்குநர் இரஞ்சித்தை குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதவது:

ஞாயிறன்று காலா திரைப்படத்தைப் பார்த்தேன். நானும் இப்பொழுது என்னை காலாவாகவே உணர்கிறேன்.  மிகவும் சிறந்த திரைப்படம்.  நமது சகோதரரான இரஞ்சித் மீண்டும் ஒரு சிறந்த படத்தைத் தந்துள்ளார். இது  நிர்ணயிக்கப்பட்ட சமூக கட்டமைப்பிற்கு எதிராக நுட்பமாக ஆனால் அதே சமயம் பொழுதுபோக்கான வழியில் உள்ளது. உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது இரஞ்சித்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT