நடிகா் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 62 படத்தின் டைட்டில் மற்றும் முதல் போஸ்டர் அவரது பிறந்த தினமான ஜூன் 22-ம் தேதி வெளியிடுப்படும் என்று சன்பிக்சா்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலையாளத் திரையுலகில் வெற்றிப் படங்களான களி, அங்கமாலி டயரீஸ், சோலோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பங்களித்தவர். துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக முருகதாஸ் விஜய் இருவரும் இணைவதால் ரசிகா்கள் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்தக் கதையைத் தான் ஏ.ஆர்.முருகதாஸ் சூப்பர் ஸ்டாருக்காக எழுதி அதை அவரிடம் கூறி பாராட்டுக்களைப் பெற்ற கதை. இந்தப் படத்தில் ராதாரவி அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
விஜயின் பிறந்த நாள் விழா 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முந்தைய தினம், ஜூன் 21-ம் தேதி (வியாழன் கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் பா்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக சன் பிக்சா்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.