செய்திகள்

'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' -  இயக்குநராக மாறியுள்ள பிரபல தயாரிப்பாளரின் இரண்டாவது படம் 

இயக்குநராக மாறியுள்ள பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமாரின் இரண்டாவது படத் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: இயக்குநராக மாறியுள்ள பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமாரின் இரண்டாவது படத் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது 'திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அட்டகத்தி, பீட்சா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமரன்.

இவர் கடந்த  ஆண்டு சந்தீப் கிஷனை நாயகனாகக் கொண்டு  'மாயவன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டாலும் அந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சி.வி. குமாரின் இரண்டாவது படத் தலைப்பு புதனன்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தலைப்பு போஸ்டரை வெளியிட்டு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:    

கடவுள் சுப்ரமணியரின் அருளால் எனது இரண்டாவது திரைப்படத்திற்கான பணிகளை பாடல் பதிவுடன் இன்று துவங்குகிறேன். கடவுள் எங்களை வெற்றிக்கு வழிகாட்டுவார்.வாழ்த்தி ஆதரவு தாருங்கள் நண்பர்களே

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பாடல்பதிவு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

சினிமா வட்டாரத் தகவல்களின் படி இந்த திரைப்படமானது சென்னையைச் சேர்ந்த பெண் தாதா ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது என்று தெரிகிறது. நடிகர்கள் டேனியல் பாலாஜி, கலையரசன் மற்றும் மகேஷ் பகவதி ஆகியயோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் துவங்க உள்ளது என்றும் தெரிய வருகிறது.

ஹரி டபூசியா இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT