செய்திகள்

2.0 ஏன் 2-வாக மாறியது? படக்குழுவினர் விளக்கம்!

படத்தின் டைட்டிலான தமிழ்ப்படம் 2.0 என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தை கலாய்க்கும் விதமாக இத்தலைப்பு இருந்ததால்

சினேகா

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. தமிழ்ப் படங்களை கன்னா பின்னாவெனக் கலாய்த்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘தமிழ்ப் படம் 2.0’ உருவாகி வருகிறது. விரைவில் வெளியாகவிருக்கும் இதிலும் மிர்ச்சி சிவாதான் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்.

திஷா பாண்டே (தமிழ்ப் படத்தின் நாயகி) முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கண்ணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளர். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரிக்கும் இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் வெளியிடவுள்ளது. 

இப்படத்தின் டைட்டிலான தமிழ்ப்படம் 2.0 என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தை கலாய்க்கும் விதமாக இத்தலைப்பு இருந்ததால், ரஜினி ரசிகர்களிடையே கசப்பு எழுந்தது. தற்போது திடீரென்று தமிழ்ப்படம் 2.0 என்ற தலைப்பை தமிழ்ப்படம் 2 என மாற்றிவிட்டனர் படக்குழுவினர். தலைப்பிலிருந்து ஜீரோ உதிர்ந்துவிட்டக் காரணத்தை Y NOT ஸ்டுடியோஸ் தங்கள் ஃபேஸ்புக் பதிவில் ப்ரஸ் ரிலீஸாக (இதுவும் கிண்டல் தொனியில்தான்) வெளியிட்டுள்ளது. 

‘0-வுக்கு ஏது மதிப்பு என அறிவுறுத்தப்பட்டதால், எங்கள் டைட்டிலிருந்து அதை மட்டும் நீக்குகிறோம். இனி இப்படத்தின் தலைப்பு தமிழ்ப்படம் 2 என்றே அழைப்படும்’ என சுருக்கமாக உள்ளது அப்பதிவு.

இது போன்ற அதிரடி நகைச்சுவை துணுக்குகளால் நாளுக்கு நாள் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT