நான் நலமாக உள்ளேன்: தனுஷ் அறிவிப்பு
தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் படம் - மாரி 2...
தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் மாரி 2 படப்பிடிப்பில் தனுஷுக்குக் காயம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் பலரும் இதுகுறித்து தனுஷிடம் விசாரித்தார்கள். இதையடுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் தனுஷ்.
என் அன்பான ரசிகர்களுக்கு, பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் நலமாக உள்ளேன். உங்களுடைய அக்கறைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
Advertisement