முகப்பு
செய்திகள்

தன்னைப் பற்றிய மீமுக்குப் பாராட்டு தெரிவித்த ஜெயம் ரவி!

ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் படத்தில் கயிற்றில் தொங்குவது போன்ற காட்சியையும்..

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ள படம் - டிக் டிக் டிக். ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் படத்தில் கயிற்றில் தொங்குவது போன்ற காட்சியையும் டிக் டிக் டிக் படத்தில் விண்வெளியில் உள்ள காட்சியையும் இணைத்து மீம் ஒன்று வெளியானது. இதைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெயம் ரவி, என்னுடைய 15 வருட திரை வாழ்க்கை இந்த ஒரு மீமில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments