சிரஞ்சீவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கருதப்படும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைக் கதை எனக்கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் முன்னதாக தமனா மற்றும் நயன் தாரா என இரு நாயகிகள் இருக்கையில் தற்போது காலா திரைப்படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்த ஹூமா குரேஸியும் முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என டோலிவுட் பட்சி கூறுகிறது. இத்திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்கும் நடிகர்களைத் தவிர அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, கிச்சா சுதீப், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பிரபலங்களும் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஹூமா குரேஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவராததால் அவர் இந்தத் திரைப்படத்தை ஒப்புக் கொண்டாரா, இல்லையா? என்பது குறித்து தகவல்கள் இல்லை.
‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா நடித்த படத்தின் டிரெய்லர்!
பிளாஸ்டிக்குக்கு தடை கோருகிறார்களே, அதில் ஆணுறையும் அடங்குமா? நடிகை பூனம் பாண்டே!
உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகையிடம் பறிக்கப்பட்ட செல்போன்
ஆதரவின்றித் தவிக்கும் மூத்த நடிகர்கள்: நடிகர் கார்த்தி கவலை!
லண்டனில் தொடங்குகிறது சூர்யா - கே.வி. ஆனந்த் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.