செய்திகள்

காலா படம் இந்தியாவில் எத்தனை திரையரங்குகளில் வெளியானது?: அதிகாரபூர்வத் தகவல்! 

எழில்

ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். இசை - சந்தோஷ் நாராயணன்.

இந்நிலையில் காலா படம் குறித்த கட்டுரை ஒன்று ஆங்கில நாளிதழில் வெளியானது. இதையடுத்து அதுகுறித்த விளக்கம் ஒன்றை காலா படச்செய்தித் தொடர்பாளர் ரியாஸ் வெளியிட்டுள்ளார். அவர்
கூறியதாவது:

காலா படம் 1700 திரையரங்குகளில் வெளியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது தவறு. 2900 திரையரங்குகளுக்கும் அதிகமாக. வட இந்தியாவில் 1413 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு - 720 திரையரங்குகள், கேரளா - 243 திரையரங்குகள், கர்நாடகா - 150 திரையரங்குகள், ஆந்திரா - 400 திரையரங்குகள் என மொத்தமாக 2926 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்கிற அதிகாரபூர்வத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT