ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்!
இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயண் தான் இசையமைத்துள்ளார்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்தது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் உறவினரான அனிருத், முதல்முறையாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயண் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் மூலமாக முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜும் அனிருத்தும் இணைகிறார்கள்.