செய்திகள்

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

சினேகா

இன்று இணையமே நொறுங்கும் அளவிற்கு அதிரடியாக வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் காலா டீஸர் கலக்கிவரும் நிலையில், நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் தா தா 87 என்ற திரைப்படத்தின் டீஸரும் வெளியாகி உள்ளது. இயக்குனர் விஜய் ஸ்ரீ  இப்படத்தை இயக்கியுள்ளார் . இதன் டீஸர் இதோ : 

சாருஹாசனுக்குத் தற்போது 87 வயதாகிறது. அவர் குணசித்திர வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நிலைக் காரணமாக சில ஆண்டுகளாக திரைபடங்களில் நடிக்காமல் இருந்தார் சாருஹாசன். இந்நிலையில் இயக்குநர் விஜய்ஸ்ரீயின் தா தா 87 படத்தின் கதை அவருக்குப் பிடித்துவிடவே, படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு நடித்து முடித்தார். தா தா 87 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  இந்தப் படத்தில் சாருஹாசனுடன் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர், கோலிவுட்டில் ரீ எண்ட்ரியாகியிருக்கும் நடிகர் ஜனகராஜ். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த ஜனகராஜ், இந்தப் படத்துக்காக மீண்டும் களம் இறங்கியுள்ளார். இந்த இருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் ‘தா தா 87’.சாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஹீரோயினுக்கு அப்பாவாக, ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியாகவும் நடிக்கின்றனர். 

கதாநாயகிகளாக ஸ்ரீ பல்லவி மற்றும் அனு பல்லவி என இருவர் நடிக்கின்றனர். ஸ்ரீ பல்லவி டோலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் தா தா 87 தான் அவரது முதல் படம். அனுபல்லவி ஊட்டியைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் அவர் வட சென்னையைச் சேர்ந்த ரவுடிப் பெண்ணாக நடிக்கவிருக்கிறாராம்.

லியான்டர் லீ மார்ட்டி இசையில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்யாசமான கெட்டப்பில் வயதான தாதாவாக சாருஹாசன் இந்த டீஸரில் மிரட்டுகிறார். உண்மையிலேயே இந்த டீஸரைப் பார்த்ததும் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை தந்துள்ளது. 

காலா மற்றும் தா தா 87 என இரண்டு படங்களும் தாதாவை மையமாக கொண்டுள்ளதால் ரசிகர்களின் ஆர்வத்தை இவை தூண்டிவிட்டன. அண்மையில் தா தா 87 படத்தின் டீஸர் வெளியான போது அதிக கவனம் பெறவில்லை. ஆனால் இன்று காலா டீஸர் வெளிவந்த பிறகு, இந்த இரண்டு படங்களையும் கலாய்த்து மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT