செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்! 

நடிகை ஸ்ரீ தேவி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துபையில் மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சினேகா

நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துபையில் மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதித்தது.

தாயை இழந்த ஜான்வி கபூரின் பிறந்த நாள் 6-ம் தேதி தனது 21-வது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். அம்மா இறந்து சில நாட்களே ஆன நிலையில் பிறந்த நாள் கொண்டாட எப்படி மனம் வந்ததோ என்று சமூக வலைத்தளங்களில் ஜான்விக்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் ஜான்வி தனது அம்மாவுடன் மார்ச் 6-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஸ்ரீதேவி இறந்து ஓரிரு வாரங்களே ஆன  நிலையில் செவ்வாய்க்கிழமை தனது பிறந்தநாளை மும்பையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடினார் ஜான்வி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி பகிர்ந்துள்ள ஒரு காணொளியில், எளிமையான உடையில் காணப்பட்டார். பிறந்த நாள் கேக்கை வெட்டுவதற்கு முன் ஜான்வி கண்களை மூடி மனமுருகி வேண்டிய படியிருக்கும் ஒரு புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT