மிஷ்கின் இயக்கும் புதிய படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு!
மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துகு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இது புதிய கூட்டணி.
மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த நடிகர் சாந்தனு, என்னுடைய புதிய பிறப்பு என்று கூறியுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், தன்னுடைய சகோதரர் இயக்கிய சவரக்கத்தி படத்தின் கதையை எழுதி, தயாரித்ததோடு நடிக்கவும் செய்தார். அடுத்ததாக, பி.சி. ஸ்ரீராம் - சாந்தனுவுடன் கைகோர்த்துள்ளார்.