செய்திகள்

ரஷ்ய காதலரைத் திருமணம் செய்தார் நடிகை ஸ்ரேயா!

எழில்

2001-ல் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு கடந்த மார்ச் 12 அன்று திருமணம் ஆனதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துள்ளார் ஸ்ரேயா.

ஷபனா அஸ்மி, மனோஜ் பாஜ்பயி என திரையுலகைச் சேர்ந்த இருவர் மட்டுமே ஸ்ரேயாவின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைத்துள்ளார் ஸ்ரேயா. உதய்பூரில் ஸ்ரேயாவுக்குத் திருமணம் நடைபெறுவதாகச் செய்திகள் வெளியான நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இத்தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியானாலும் தனது திருமணம் குறித்து இதுவரை ஸ்ரேயா அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT